முப்பெரும் விழா பொதுக்கூட்டம்; கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின்

முப்பெரும் விழா பொதுக்கூட்டம்; கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின்

திமுக சார்பில் நடக்கும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார்.  

திமுக சார்பில் நடக்கும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார்.

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை,சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்,மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் உட்பட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

இவர்களுடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுக்கூட்டத்தில் பங்கெடுக்கின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா,கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,நாடாளுமன்ற வெற்றியை தேடி தந்த தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழா பொதுக்கூட்டமாக நடத்தப்படுகிறது.28 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வசம் வந்திருப்பதன் காரணமாகவும், மேற்கு மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது என்பதை காட்டும் விதமாகவும் பொதுக்கூட்டம் கோவையில் பிரமாண்டமாக நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள்,திமுக கட்சித் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கபடுவதால் பிற்பகலுக்கு பின்னர் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story