திமுக சார்பில் முப்பெரும் விழா!

திமுக சார்பில் முப்பெரும் விழா!

திமுக சார்பில் கோவையில் முப்பெரும் விழா நாளை நடக்கவுள்ள நிலையில், வாகனங்கள் வரக்கூடிய வழித்தடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் கோவையில் முப்பெரும் விழா நாளை நடக்கவுள்ள நிலையில், வாகனங்கள் வரக்கூடிய வழித்தடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் முப்பெரும் விழா நாளை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து கட்சி தொண்டர்கள் வருகை தர உள்ளனர்.விழா நடைபெறும் மைதானத்திற்கு வருகை தரும் வானகங்கள் எந்தெந்த வழியாக வர வேண்டும் என்பது சாலைகள் விபரம் குறித்து கோவை மாவட்ட திமுக சார்பில் வெளியிடபட்டுள்ளது.

1.கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் மேற்கு பகுதிகள்* ஆகிய பகுதிகளிலிருந்து பொதுக் கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை, ஜென்னி கிளப் வழியாக கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும். 2. மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதிகள்,அன்னூர்,அன்னூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளிலிருந்து பொதுக் கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் சேரன்மாநகர்,தண்ணீர் பந்தல் வழியாக வந்து கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும்.

3.சூலூர் தொகுதி பகுதிகளிலிருந்து பொதுக் கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை,ஜென்னி கிளப் வழியாக கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும். 4.வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவ பகுதிகளிலிருந்து பொதுகூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் பொள்ளாச்சி சாலை L&T Bypass, வெள்ளலூர் பிரிவு, வெள்ளலூர், சிங்காநல்லூர், காமராஜர் சாலை, அவினாசி சாலையை அடைந்து,டைடல் பார்க், தண்ணீர் பந்தல் ஜங்சன் வழியாக கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும் 5.சேலம், நாமக்கல், ஈரோடு,திருப்பூர் பகுதிகளிலிருந்து பொது கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை நீலாம்பூர், சின்னியம்பாளையம்,தொட்டிபாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பை கடந்து வலது புறம் திரும்பி இஸ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும். 6.திருச்சி கரூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்கள் பகுதிகளிலிருந்து பொது கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் திருச்சி சாலையிலிருந்து சூலூர் Y ரோடு சந்திப்பிலிருந்து வலது பறம் திரும்பி சூலூர் குளம், முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே பாலம் வழியாக அவினாசி சாலை சூலூர் பிரிவு அடைந்து நீலாம்பூர் சின்னியம்பாளையம்தொட்டிபாளையம் பிரிவு,சித்ரா சந்திப்பை கடந்து வலது புறம் திரும்பி இஸ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு வரவும் வேண்டும்.

7.பழனி,உடுமலை,வால்பாறை,ஆனைமலைபொள்ளாச்சி பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் பொள்ளாச்சி சாலை L&T Bypass,வெள்ளலூர் பிரிவு,வெள்ளலூர், சிங்காநல்லூர், காமராஜர் சாலை, அவினாசி சாலையை அடைந்து,டைடல் பார்க், தண்ணீர் பந்தல் ஜங்சன் வழியாக கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும். 8.வாளையார்,க.க.சாவடி,நவக்கரை,எட்டிமடை பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் பாலக்காடு சாலையிலிருந்து குனியமுத்தூர், ஆத்துப்பாலம்,உக்கடம் சுங்கம் பைபாஸ் சுங்கம், ராமநாதபுரம் சிக்னல், புலியகுளம்,அவினாசி சாலை அடைந்து டைடல பார்க்,தண்ணீர் பந்தல் ஜங்சன் வழியாக கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும். 9. நீலகிரி, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அன்னூர், குரும்பபாளையம், காளப்பட்டி 4 ரோடு அடைந்து, விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் அடைந்து கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும்.

10.துடியலூர், கணுவாய், ஆனைகட்டி பகுதியில் இருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, சேரன் மாநகர் வழியாக தண்ணீர்ப் பந்தல் அடைந்து, கொடீசியா மைதானத்திற்கு வர வேண்டும். 11.அன்னூர், கோவில் பாளையம், குரும்ப பாளையம்ஆகிய இடங்களிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் கோவில்பாளையம், காபிக்கடை விளாங்குறிச்சி 4 ரோடு ஜங்சன் வழியாக சேரன் மாநகர் அடைந்து கொடிசியா மைதானத்திற்கு வர வேண்டும் என திமுக சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது.

Tags

Next Story