முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்
தேரோட்டம்
கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலின் தை தேரோட்ட திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலையில் சிறப்பு பூஜைகளும் ,இரவில் திருவீதி உலா நிகழ்வுகளும் நடைபெற்றன. மேலும், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. ஒன்பதாம் திருநாளான நேற்று காலை அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, தோ்வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அனைத்து மண்டக படிதாரா்கள் செய்திருந்தனா். புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேஷன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Tags

Next Story