மார்ச்-2 ல் புடவைக்காரியம்மன் கோவிலில் முப்பூசை திருவிழா

மல்லசமுத்திரம் அருகே வையப்பமலைபுதூர் புடவைக்காரியம்மன் கோவிலில் வரும் 2ல் முப்பூசை திருவிழா நடக்க உள்ளது.

மல்லசமுத்திரம் அடுத்த, வையப்பலைபுதூரில் உள்ள பெருமாள்சுவாமி, புடவைக்காரியம்மன், வீரகாரன் மற்றும் சப்தகன்னிமார்கள் சுவாமி கோவிலில் வருகிற 29ம்தேதி வியாழனன்று, வீட்டு சாமி கும்பிடுதல் நிகழ்சி நடைபெறும். அதையொட்டி அன்று இரவு 9மணிமுதல் அதிகாலை 3மணிவரையில் சக்திஅழைத்தல், சக்திபானை அழைத்தல், புடவை அலங்காரம், பெருமாள் சுவாமிக்கு பச்சைபூசை, ஈனாபிறவை வெட்டுதல், சிறப்புபூஜை, தீபாராதனை, கற்பூர ஆராதனை நடைபெறும்.

மார்ச்1 வெள்ளிக்கிழமையன்று, இரவு11மணிக்கு புடவைக்காரியம்மன் ஆலயத்திலிருந்து வீரகாரன் கோவிலுக்கு பொங்கல் பானை படைக்கலம் அழைக்கப்படும். 12மணிக்கு பொங்கல் வைக்கப்படும். 2ம்தேதி சனிக்கிழமை அதிகாலை 3மணியிலிருந்து காலை 8 மணிவரையில் கன்னிமார் அழைத்தல், ஆடு, கோழி, பன்றி பலிகொடுத்தல், காவு சோறு போடுதல், வீரகாரன் கோவிலில் இருந்து வீட்டுகோவிலில் சாமி குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெரும். 4ம்தேதி மறுபூசையுடன் திருவிழா நிறைவடைகின்றது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Next Story