வையப்பமலை புதூர் புடவைக்காரியம்மன் கோவிலில் முப்பூசை திருவிழா

X
வையப்பமலை புதூர் புடவைக்காரியம்மன் கோவிலில் முப்பூசை திருவிழா கோலாகலமாக நடந்தது.
வையப்பமலை புதூர் புடவைக்காரியம்மன் கோவிலில் முப்பூசை திருவிழா கோலாகலமாக நடந்தது.
மல்லசமுத்திரம் அடுத்த, வையப்பலைபுதூரில் உள்ள பெருமாள்சுவாமி, புடவைக்காரியம்மன், வீரகாரன் மற்றும் சப்தகன்னிமார்கள் சுவாமி கோவிலில் நேற்று முப்பூசை திருவிழா நடந்ததையொட்டி, கடந்த பிப்.29ம்தேதியன்று, வீட்டு சாமி கும்பிடுதல் நிகழ்சி நடந்தது. அதையொட்டி அன்று இரவு 9மணிமுதல் அதிகாலை 3மணிவரையில் சக்திஅழைத்தல், சக்திபானை அழைத்தல், புடவை அலங்காரம், பெருமாள் சுவாமிக்கு பச்சைபூசை, ஈனாபிறவை வெட்டுதல், சிறப்புபூஜை, தீபாராதனை, கற்பூர ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு11மணிக்கு, புடவைக்காரியம்மன் ஆலயத்திலிருந்து வீரகாரன் கோவிலுக்கு பொங்கல் பானை படைக்கலம் அழைக்கப்பட்டது. 12மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3மணியிலிருந்து காலை 8 மணிவரையில் கன்னிமார் அழைத்தல், ஆடு, கோழி, பன்றி பலிகொடுத்தல், காவு சோறு போடுதல், வீரகாரன் கோவிலில் இருந்து வீட்டுகோவிலில் சாமி குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தது. நாளை 4ம்தேதி மறுபூசையுடன் திருவிழா நிறைவடைகின்றது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் வெகுவிமர்சியாக செய்திருந்தனர். *அதேபோல், எலச்சிபாளையம் ஒன்றியம், அள்ளாலபுரம் விநாயகர், புடவைக்காரியம்மன், வீரகாரன், எதிர்வீரகாரன், எல்லம்மாள், லிங்கம்மாள், கன்னிமார் சுவாமி கோவிலிலும் முப்பூசை திருவிழா வெகுவிமர்சியாக நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
