இரட்டை இலையுடன் முரசு சின்னம் - காஞ்சியில் வாக்காளர்கள் குழப்பம்

இரட்டை இலையுடன் முரசு சின்னம் - காஞ்சியில் வாக்காளர்கள் குழப்பம்

முரசு சின்னமும், இரட்டை இலை சின்னமும்

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடாத தே.மு.தி.க வின், முரசு சின்னமும், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அருகில், வரையப்பட்டுள்ளதால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடுவதால், தன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,விற்கு தே.மு.தி.க., வினர் கோனேரிக்குப்பம் ஊராட்சி, மின் நகரில் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். இதில், தங்களது கூட்டணி கட்சியான இரட்டை இலை சின்னத்துடன், தங்களது கட்சி சின்னமான முரசு சின்னத்தையும் ஒரே இடத்தில் வரைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - நா.த., - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடாத தே.மு.தி.க., வின், முரசு சின்னமும், இரட்டை இலை சின்னம் அருகில், வரையப்பட்டுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த வாக்காளர் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பிற வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story