கொலை குற்றவாளிகள் காவல் நிலையத்தில் சரண்
பைல் படம்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் நேற்று திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிராஜ் என்பவர் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இவரை கடந்த 20ஆம் தேதி ஜங்ஷன் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து மாநகர போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று (ஏப்.21) ஜெயக்குமார், முத்துக்குமார், சந்துரு ஆகிய மூன்று பேர் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
Next Story