கொலை வழக்கு : 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
கொலை வழக்கு : 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
King 24x7 Angel |22 Feb 2024 5:20 AM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 20.01.2024 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி மகன் சம்பத் செல்வகுமார் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சேர்வைக்காரன்மடம் கிழக்குத் தெருவை சேர்ந்த ஜெயபாண்டி மகன் மாரிசெல்வம் (36) என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கடந்த 02.02.2024 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை அருவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் ஆண்டியா (எ) ஆண்டிகுமார் (23) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். மேற்கண்ட வழக்குகளில் கைதான மாரிசெல்வம் மற்றும் ஆண்டியா (எ) ஆண்டிகுமார் ஆகிய 2 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையில் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story