தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை - 2 பேர் கைது !

தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை -  2 பேர் கைது !
X

கொலை

கன்னியாகுமரி அருகே தலையில் கல்லை போட்டு வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் தனேஷ் (28). கூலித் தொழிலாளி. இவரும் அகஸ்தீஸ்வரம் பகுதி சேர்ந்த ரகுபாலன் (24) என்பரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல் கன்னியாகுமரி அடுத்துள்ள வடுகன்பற்று நான்கு வழிச்சாலையில் இருட்டான பகுதியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் மற்றொரு நண்பர் திவாகர் என்பவரும் மது குடித்துள்ளர்.அப்போது ரகுபாலனுக்கும் தனேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரகுபாலனுக்கு ஆதரவாக திவாகர் பேசியுள்ளார். இந்த தகராறு கைகலப்பாக மாறியது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் குடிபோதையில் சரமரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ரகு பாலன், திவாகரன் சேர்ந்து தனேசை கீழ தள்ளி, பெரிய கல்லை எடுத்து தலையில் வீசினர். இதில் தனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த அந்த வழியாக சென்றவர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து இன்று அதிகாலையில் கன்னியாகுமரி அருகே பதுங்கி இருந்த கொலையாளிகள் ரெண்டு பேரையும் தனிப்படைப் பு போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story