செய்தியாளர் மீது கொலை வெறிதாக்குதல் – திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

செய்தியாளர் மீது கொலை வெறிதாக்குதல் – திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

வெடப்பட்ட செய்தியாளர்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிருபர் நேசபிரபுவை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதால் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் மற்றும் கோவை மாவட்டத்தின் சூலூர் பகுதி நியூஸ் 7 தமிழ் செய்தியாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் நேச பிரபு. அரசு சார்ந்த செய்திகள் மட்டுமல்லது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் சார்ந்த கோரிக்கைகளை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆக்கப்பூர்வ செய்திகளை வெளிப்படுத்தி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மூன்று மணி அளவில் இருந்து அவரது வீட்டிற்கு அருகாமையில் வாகன எண் இல்லாத இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மர்ம கும்ப கும்பல் அவரது விலாசம் மற்றும் அவர் குறித்த தகவல்களை விசாரித்து வந்துள்ளனர். காலை முதல் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர், மாலை வீடு வந்த நிலையில் இவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த தகவல் இவருக்கு கிடைத்துள்ளது.

மாலை நேச பிரபு வீட்டில் இருந்தபோது இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வாகன எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதை கண்ட அவர் உடனடியாக காவல் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து புகார் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக கமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திலிருந்து நேச பிரபுவை தொடர்பு கொண்டு புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். புகார் குறித்த விளக்கத்தை அவர் அளித்த நிலையில் தன்னை மீண்டும் மீண்டும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வருவதாகவும் வீட்டைச் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையிலும் கூட ஆபத்தை உணராத காவல்துறையினர் நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க வலியுறுத்தி உள்ளனர்.

தனக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து காவல்துறையிடம் தான் வீட்டை விட்டு வெளியேறுவது ஆபத்திற்கு வழி கொடுக்கும் என தொடர்ந்து வலியுறுத்தியும் கூட காவல்துறையினர் புகாரை அலட்சியப்படுத்தும் வகையில் காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள் காவலர்கள் வேறு பகுதியில் இருக்கின்றார் , பற்றாக்குறையில் உள்ளனர் என தெரியப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தன்னை நோட்டம் விடுவதை அறிந்து நேச பிரபு தனது நான்கு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறி தன்னை நோட்டு விடுபவர்கள் எந்த வாகனத்தில் வருகிறார்கள் , அவர்கள் வாகன எண் , அடையாளம் தெரிபவர்களா என்பதை காண வந்துள்ளார். அப்போதும் கூட காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருடன் தொலைபேசியில் தன்னை நோட்டம் விடுபவர்களின் விவரத்தை தொடர்ந்து வழங்கிக் கொண்டே வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மர்ம கும்பல் தன்னை கடந்து சென்ற நிலையில் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு தன்னை நோட்டமிடுபவர்கள் குறித்த விவரங்களை செல்போனில் காவலர்களுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கடந்து சென்ற மர்ம கும்ப கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கார்களில் சுமார் 20 பேர் நேச பிரபுவை சுற்றி வளைத்துள்ளனர். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த நேச பிரபு உடனடியாக அருகில் இருந்த பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார்.

பெட்ரோல் பங்கில் இரண்டு நபர்கள் மட்டுமே இருந்த நிலையில் ஏராளமானோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைவதை கண்டு அதிர்ச்சி அடைந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஒதுங்கிக் கொள்ள மர்ம கும்பல் பெட்ரோல் பங்க் அலுவலகத்தின் கதவுகளை உடைத்து நேச பிரபுவை கடுமையாக தாக்கியதோடு அவரை வெளியே இழுத்து கை கால் என பல்வேறு இடங்களில் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். ஆள் நடமாட்டம் குறைவான அப்பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தடுக்க கூட நபர்கள் இல்லாத நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நேச பிரபுவை அப்படியே விட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது. இச்சம்பழத்தைப் பார்த்த அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக காமநாயக்கன்பாளையம்

காவல்துறையினர் நேரில் சென்று தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நேச பிரபுவை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதற்கட்ட முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கை கால்கள் மற்றும் உடல் என பல்வேறு இடங்களில் ஆழமான வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆறு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்ச சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சம்பவம் நடந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டார் மேலும் சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் வேகமாக பரவியதை தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் , மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் , திருப்பூர் பத்திரிகையாளர் சங்கம், திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள செய்தி மற்றும் ஊடக சங்கத்தினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வரக்கூடிய நிலையில் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ் ஆனந்தன் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜகவின் வடக்கு மாவட்ட ஊடகப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Tags

Next Story