மல்லசமுத்திரத்தில் முருக பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரை துவக்கம்
பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
வருடம்தோறும் தைதிருனாளன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முருகபக்தர்கள் மாலை அணிந்து பழனிக்கு பாதையாத்திரை செல்வது வழக்கம்.
அதன்படி, மல்லசமுத்திரம் சின்னகொல்லபட்டி, பெரியகொல்லபட்டியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குருசாமிகள் ஜோதிகிருஷ்ணன், விஜயன் தலைமையில் மாலை அணிந்து, காவடிகள் சுமந்தும், மேளதாளத்துடன் நேற்று அதிகாலை 2மணிக்கு பழனிக்கு சென்றனர்.
முன்னதாக, பெரியகொல்லபட்டியில் இருக்கும் விநாயகர் கோவிலில் 23வகையான அபிசேகம் செய்தும், மல்லசமுத்திரம் முத்துகுமாரசுவாமி, பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் நான்குரத வீதிகளின் வழியாக வலம் வந்து பழனிக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, காங்கேயம், தாராபுரம் வழியாக பழனிக்கு செல்ல ஐந்து நாட்கள் ஆகும் எனவும், அதிகவெயில் பொழுதிலில் ஆங்காங்கே ஓய்வு எடுத்தும், வழிநெடுக்க பக்தர்களின் பசியை போக்க இலவசமாக அன்னதானம், தேனீர் முதலியவற்றை பக்தர்கள் வழங்குவர் எனவும், ஐந்தாம்நாள் பழனியில் மலைமீது வீற்றிருக்கும் முருகனை தரிசித்தும், மாலை பொழுதில் கோவிலை வலம்வரும் தங்க தேரினை தரிசித்தும் வீடு திரும்புவோம் என தெரிவித்தனர்.