52வது ஆண்டாக மாலை அணிந்த முருகபக்தர்கள்

சங்ககிரியில் 52வது ஆண்டாக முருகபக்தர்கள் மாலை அணிந்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முருகபக்தர்கள் மார்கழிமாதத்தையொட்டி 52வது ஆண்டாக மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சங்ககிரி நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முருகபக்தர்கள் மார்கழி மாதத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிந்து முருக கடவுளின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புகின்றனர்.
அதனையடுத்து 52வது ஆண்டாக இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட முருகபக்தர்கள் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ளஅருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்து வழிப்பட்டனர். அதனையடுத்து கணபதி ஹோமம் செய்யப்பட்டு கோவில் சிவாச்சாரியார் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். பக்தர்கள் முருகனின் பக்திபாடல்களை பாடி வழிப்பட்டனர்.
டிசம்பர் 15ம் தேதி முதல் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் ஜனவரி 8ம் தேதி சங்ககிரியில் இருந்து புறப்பட்டு பழனி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி ஆகிய அறுபடை வீடுகளில் உள்ள முருக பெருமானை தரிசித்துவிட்டு அறுபடை வீடுகளுக்கு செல்லும் வழிகளில் உள்ளஅனைத்து முக்கிய கோவில்களில் உள்ள சுவாமிகளை வழிப்பட்டு ஜனவரி 13ம் தேதி சங்ககிரி திரும்ப உள்ளதாக முருக பக்தர்கள் தெரிவித்தனர்.
