முருகன் எங்கள் மருமகன்: சீர்வரிசைகளுடன் சென்ற எடப்பாடி பக்தர்கள்

முருகன் எங்கள் மருமகன்:  சீர்வரிசைகளுடன் சென்ற எடப்பாடி பக்தர்கள்

சீர்வரிசைகளுடன் சென்ற பக்தர்கள்

எடப்பாடியில் இருந்து ஐந்து நாட்கள் பாதையாத்திரையாக சீர்வரிசைகளுடன் பக்தர்கள் சென்றனர்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருநாளன்று தமிழக மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனி முருகனுக்கு பாதயாத்திரை ஆகவும் அழகு குத்தி காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் ஆனால் அவர்கள் முருகனை தரிசித்து விட்டு இரவு மலையை விட்டு இறங்கி விட வேண்டும் மழையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

ஆனால் சேலம் மாவட்டம் எடப்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஒரு சமுதாயத்தினர் மட்டும் இரவு முழுவதும் தங்கி முருகனே வழிபட்டு வருவது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டும் 5 நாட்கள் பாதயாத்திரை ஆக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ் கடவுளான முருகனுக்கு பழனி முருகன் எங்கள் மருமகன் எனக் கூறி கோயிலில் சீர்வரிசைகளுடன் வந்து ஒரு நாள் இரவு முழுவதும் தங்கி தங்க ரதம் இழுத்து வந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.

Tags

Next Story