ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோவிலில் இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் கொடியேற்றம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் 84வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் முருகனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 25ம் தேதி காலை அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவை காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து பால்குடம் சுமந்து வந்து முருக பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
Next Story