தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம்

தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம்

தேமுதிக ஆலோசனை கூட்டம் 

முசிறி அருகே தா.பேட்டைதேமுதிக மாவட்ட அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ். குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கழக தொழிலாளர் அணி துணை செயலாளர் பெருமாள், மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.திருச்சி வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக தலைவர் விஜயகாந் அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது, 2. தமிழகத்தில் நிலவி வரும் போதை பொருள் புழக்கத்தை முழுமையாக தமிழக அரசு தடுக்க வேண்டும், 3. தமிழ்நாட்டுக்கு கோடைகாலத்தில் மின் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து மின்சாரம் கிடைக்க வலியுறுத்தப்படுகிறது 4. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி முறையாக குடிநீர் வழங்க வேண்டி வலியுறுத்தப்படுகிறது 5. தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக திகழ்ந்திட பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு மாவட்ட நிர்வாகி வலியுறுத்தப்படுகிறது‌ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தலைமை கழகம் வேட்பாளரை யாரை அறிவிக்கின்றார்களோ அவருக்கு அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் தேமுதிக தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என பேசினார் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் பெருமாள். சாகுல் ஹமீது பேசுகையில் நமது தேமுதிக தலைமை கழகம் யாரை வேட்பாளராக அறிவிக்கின்றது அவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழகம் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் பேசினார் .

நிகழ்வில் திருச்சி தேமுதிக வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட முசிறி துறையூர் மண்ணச்சநல்லூர் லால்குடி பகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவம் பொறித்த படம் அனைவருக்கும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story