நலத்திட்ட உதவிகள் வழங்கிய முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம்
நலத்திட்ட உதவிகள் வழங்கல் 
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் 193 பேருக்கு ரூ.17.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 120 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 49 பயனாளிகளுக்கு சிறு தொழில் உதவித்தொகைகளையும், 14 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரங்களையும், 10 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளும் என மொத்தம் 193 பயனாளிகளுக்கு ரூ.17.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.கமல் கிஷோர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகானந்தம் வரவேற்புரையாற்றினார். முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க கௌரவ செயலாளர் முகம்மது ஸலீம் விளக்கவுரையாற்றினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆண்டணி ஃபெர்னான்டோ. சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் குளித்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story