அதிமுகவில் இணைந்த மாற்று கட்சிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள்

அதிமுகவில் இணைந்த மாற்று கட்சிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள்

அதிமுகவில் இணைந்த இஸ்லாமியர்கள் 

சேலம் மாநகர் மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய மக்கள் 500 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அவர் மசூதியில் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகை மேற்கொண்டார். இதனையடுத்து அவர் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் 520 வாக்குறுதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது.ஆனால் திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஏதோ சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு 520 அறிவிப்புகளையும் நிறைவேற்றிவிட்டதாக பொய்யாக சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். திமுக ஆட்சியில் உள்ள பொம்மை முதலமைச்சர், மக்களைப்பற்றி கவலைப்படாமல் உள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலினின் குடும்பம் தான் மக்கள், குடும்ப மக்களை தான் மக்களாக பார்க்கிறார். குடும்பத்தில் உள்ள மக்கள் தான் பதவிக்கு வரவேண்டும், ஏற்கனவே ஏகப்பட்டதை கொள்ளையடித்து வருகிறார்கள். தற்போது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். நிச்சயம் இது நடக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதால் மக்கள் படாதபாடு பாடுகிறார்கள். என்று பேசினார்.

Tags

Next Story