வெற்றி தோல்வியை சமமாக பார்க்கும் மனப்பக்குவம் வேண்டும்: கே.பி.முனுசாமி

வெற்றி தோல்வியை சமமாக பார்க்கும் மனப்பக்குவம் வேண்டும்: கே.பி.முனுசாமி

கூட்டத்தில் பேசும் முனுசாமி

வெற்றி தோல்வியை சமமாக என்னும் மனப்பக்குவம் வேண்டும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெற்றி தோல்வியை சமமாக என்னும் மனப்பக்குவம் வேண்டும் என கே.பி.முனுசாமி பேச்சு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதிமுக சார்பில் ஊத்தங்கரை சட்டபேரவை தொகுதியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.

அதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்திற்க்கு செல்லும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமணமண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் டி.எம்.தமிழ்செல்வம் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே. அசோக்குமார், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷ், முன்னால் சட்டபேரவை உறுப்பிர்கள் கே.இ. கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம்நாகராஜ், பொதுகுழு உறுப்பினர் கே.பி.எம். சதிஷ்குமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழகத் துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டபேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அதிமுக தொண்டர்கள் மிக கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும், வெற்றி தோல்வியை சமமாக என்னும் மனப்பக்குவம் வேண்டும் என கூறினார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல்அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், மத்தூர் ஒன்றிய செயலாளர் தேவன், சக்கரவர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story