கோவை யாக்கை மரபு அறக்கட்டளையுடன் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை யாக்கை மரபு அறக்கட்டளையுடன் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)யினுடைய தமிழ்த் துறை சார்பில் கோவையைச் சேர்ந்த யாக்கை மரபு அறக்கட்டளையுடனான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த யாக்கை மரபு அறக்கட்டளையின் சார்பாக, அதன் அறங்காவலர் திரு. அருண் ராஜா மோகன், தலைவர் திரு. சுதாகர் நல்லியப்பன், செயலாளர் திரு. குமரவேல் ராமசாமி ஆகியோரும், கல்லூரியின் சார்பாக முதல்வர் முனைவர். எஸ்.பி.விஜய்குமார் அவர்களும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை, புல முதன்மையர் முனைவர் என். சுதாகர், தமிழ்த்துறை;த் தலைவர் முனைவர் க.கணியன்பூங்குன்றனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகளுக்காக தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் சார்ந்த காணொளி வாயிலாக பண்பாடு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் விளக்கப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக பண்பாடு சார்ந்த மேம்பாட்டு திட்டங்கள், பயிற்சி பட்டறைகள் மற்றும் திறன் மேம்படுத்தல் திட்டங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்று கல்லூரி மாணவர்கள் பயனடைவர்.

Tags

Next Story