முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு

முத்தமிழ் முருகன் மாநாட்டில்  கலந்துகொள்ள அழைப்பு

முருகன்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவது குறித்து இந்து சமய அறநிலைத்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் பழனியில் வருகின்ற ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவிலில் கண்காட்சி அரங்கு ஆராய்ச்சி கட்டுரைகள், வாசிக்க ஆய்வரங்கம் உள்ளிட்ட முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் மாநாடு அமைக்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பெரியோர்களின் உரைகள், ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.இந்த மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ் கடவுள் முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் அறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமப்பணி புரிந்தோர், திருப்பணி மேற்கொண்டவர்கள், ஆன்மீகம் மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்ய உள்ளது.இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Tags

Next Story