முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

அதேபோல முதற்கட்ட தேர்தல் வாக்கு பதிவுல தமிழ்நாடு பாண்டிச்சேரி அந்த 102 தொகுதிகளில் அந்த 40 தொகுதி இந்த 40 தொகுதிகளில் ஒன்றில் கூட பாஜக வெற்றி பெறாது. அதிமுக வெற்றி பெறாது. நாற்பதிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. அதே மாதிரி அடுத்தடுத்த முடிவுகளையும் இந்தியா கூட்டணிக்கு சாதகமானது குறிப்பா கேரளாவில் 20 தொகுதிகள் இருக்கு அங்க காங்கிரஸ் எதிர்த்து கம்யூனிஸ்ட் கூட்டணி போட்டியிட்டாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வர முடியாது பெரும்பாலான இடங்களில் காப்பு தொகையை இழப்பார்கள் இந்த மாதிரியான முடிவுகள் வரும் என்பது மோடிக்கு நம்மை காட்டிலும் மிக நன்றாகவே நன்கு தெரியும் அதனால் தான் ஒரு வெறி பிடித்த தனமாக அவர் பேசுகிறார் அவர் கையாளுகிற முறை உலகத்தில் இரண்டாம் உலக போருக்கு காரணமாக இருந்து பல கோடி மக்கள் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரை பின்பற்றுகிறார் இது மிக மிக அபாயகரமானது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய அனைவரும் மோடியின் உடைய இந்த ஹிட்லர் பாணி முறையை வன்மையாக கண்டிக்க முன்வர வேண்டும்.

தேர்தல் ஆணையம் சந்திரசேகருக்கு ஒரு முடிவெடுக்கிறது மோடிக்கு ஒரு முடிவு எடுக்குது சந்திரசேகர 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என தடை விதிக்குது ஆனா மோடிக்கு எந்த தடையும் கிடையாது. திரும்பத் திரும்ப பேசுவது அவர் கட்சியில் கொள்கையில் குறித்த சாதனைகள் குறித்த என்ன செய்யப் போகிறோம் என்று பேச மறுக்கிறார் அதற்கு மாறாக இந்து முஸ்லிம் இந்த பிரச்சினையை தான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இந்த பகுதிகளில் விவசாயம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த பகுதியில வந்து நிலத்தை விவசாயிகளிடம் இருந்து எடுத்து கையகப்படுத்தி சிப்காட் அமைக்கக்கூடிய அரசின் முயற்சியை இங்கு உள்ள விவசாயிகளெல்லாம் மிக கடுமையாக ஆட்சேபனை செய்கிறார்கள். அரசு இதனை கவனத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஏற்கனவே சிப்காட்டுக்காக எடுக்கப்பட்ட நிலங்கள் நிறைய இருப்பதாக சொல்லுகிறார்கள் திருச்செங்கோட்டில் இருக்கிறதா சொல்றாங்க நாமக்கல் எங்கெல்லாம் இருக்கிறதா விவசாயிகள் சொல்றாங்க இவைகள் குறித்து அரசு பரிசீளித்து விவசாயிகளை பாதிக்காத வகையில் ஆக்கபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு திருச்செங்கோடு நகரம் ஒரு முக்கியமான நகரம் ஒரு கடுமையான போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது ஆகவே இவை சரி செய்வதற்கும் உரிய முறையில் சுற்றுச்சாலை அமைப்பதற்குள்ள நடவடிக்கை அரசு மேற்கொண்டு சுற்றுச்சாலை அமைத்து புறவழிச் சாலைகளோடு இணைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் பொதுமக்கள் ஒரு சவுரியத்திற்காகவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என முத்தரசன் கூறினார்

Tags

Read MoreRead Less
Next Story