சிலட்டூரில் முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்,சிலட்டூரில் முத்து மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி அருகே சிலட்டூரில் பழமையான முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும் சிலட்டூர் நாட் டுத் தலைவர் தங்கவேல் சேர்வைக்காரர் வடம்பி டித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிலட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை சிலட் டூர் கிராமத்தார் செய்திருந்தனர்.
Next Story