முத்து மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

முத்து மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

தரங்கம்பாடி அருகே ஹரிஹரன்கூடல் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தரங்கம்பாடி அருகே ஹரிஹரன்கூடல் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஹரிஹரன்கூடல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இவ்வாலயத்தில் கடந்த 20ஆம் தேதி தீமிதி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடைபெற்றது. முன்னதாக குளக்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மேல வாத்தியங்களும் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்திற்கு எதிரே ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்க அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு காவடி உடன் தீமிதித்தனர் இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஹரிஹரன் கூடல் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story