முத்துமாலைபுரம் காளியம்மன் கோயில் கொடை விழா

முத்துமாலைபுரம் காளியம்மன் கோயில் கொடை விழா
முத்துமாலைபுரம் காளியம்மன் கோயில் கொடை விழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
முத்துமாலைபுரம் காளியம்மன் கோயில் கொடை விழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் ராமசாமி மற்றும் காளியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூைஜை நடைபெற்றது. பாவூா்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசாமி மற்றும் காளியம்மன் கோயில் கொடை விழா தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாள் ராமசாமி கண் திறப்பும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவில் தோரணமலை நிா்வாகம் சாா்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

காளியம்மன் கோயிலில் திரளான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தோரணமலை பரம்பரை அறங்காவலா் ஆதிநாராயணன் சந்திரலீலா நினைவு மாலை நேர படிப்பகத்தின் மாணவ மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குற்றாலத்தில் இருந்து புனித தீா்த்தம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இதில் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஏற்பாடுகளை பொதுமக்கள் சாா்பில் ஊா் நாட்டாமைகள் ராஜேந்திரன் , தங்க மாரியப்பன், சுடலை , காளிதாஸ் , ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

Tags

Next Story