முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: புனிதநீர் டிரோன் மூலம் தெளிப்பு

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: புனிதநீர் டிரோன் மூலம் தெளிப்பு

கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே கிடங்கல் கிராமத்தில் கருங்கல்லால் கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, 5 கிடங்கல் கிராமத்தில் உள்ள செங்கல்லால் கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு யாக சாலைகள் அமைத்து கடந்த 2-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.

அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது அப்போது பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முத்து மாரியம்மனுக்குhசிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story