முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பைல் படம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சத்யாபுரி, செல்வா விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஜன. 12ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சத்யாபுரி, செல்வா விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஜன. 12ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கணபதி யாக பூஜை புண்யாக வாசனம் உள்ளிட்ட பூஜைகளும், பவானி கூடுதுறை ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலமும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. ஜன. 21ல் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்த நாட்களில் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக விழாவை யொட்டி, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர் கோகுல் அய்யர் குழுவினர் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story