எடப்பாடியில் என் மண் என் மக்கள் நடைபயணம்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு 135 வது தொகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மாவட்ட தலைவர் சுதீர்முருகன் தலைமையில் இன்று இரவு 7 மணி அளவில் வெள்ளாண்டி வலசு காளியம்மன் கோயில் எதிரே இருந்து எடப்பாடி பஸ் நிலையம் வரை நடை பயணம் மேற்கொண்டார்.
இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிலம்பாட்டம்,ஒயிலாட்டம்,கூடிய கலை நிகழ்ச்சி உடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்களிடையே பேசுகையில் தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும்,
காங்கிரஸ் ஆண்ட பத்து ஆண்டுகளில் அலைவரிசை கற்றையிலிருந்து இருந்து நிலக்கரி சுரங்கம் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளனர்.
மோடி என்கின்ற மனிதருக்கு மட்டும் தான் திமுக காரர்கள் பயப்படுகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அதற்கு முன்னதாக அண்ணாமலை வரும்பொழுது மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சாலையோரம் நின்று கை கொடுத்து வரவேற்று மழையில் நழைந்தவாறு நின்று அவரது பேச்சை கேட்டனர்.
இதில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த நடை பயணத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் யாத்திரை பொறுப்பாளர் ஹரிராம், மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வன், மாவட்டச் செயலாளர் ஐயப்பாராஜ், மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன்,
அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் ரவிக்குமார், எடப்பாடி நகர தலைவர் மோடிசந்திரன், உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் சிவலிங்கம், தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் ஏராளமான மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.