கோடை வெயிலில் குளிக்கும் மைனா - வைரல் வீடியோ !

கோடை வெயிலில் குளிக்கும் மைனா - வைரல் வீடியோ !

கோடை வெயிலில் குளிக்கும் மைனா

கோடை வெயிலில் ஆனந்த குளியல் போடும் மைனாவின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அச்சுக்கட்டு பகுதியில் வெயிலின் தாக்கம், தாங்க முடியாமல் பறவை ஒன்று சாலை பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது.

வெயில் தாக்கம் இப்பகுதியில் சுமார் 96 டிகிரி செல்சியஸையும் தாண்டி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மனிதர்கள் பலரும் வெளியில் நடமாட தயங்கி, வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மைனா பறவை ஒன்று வெப்பக் கொடுமை தாங்க முடியாமல் சாலையின் ஓரத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரில், ஆனந்த குளியல் போட்டு வெப்பத் தாக்கத்தை தணித்து கொண்ட காட்சியானது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முதலில் தண்ணீரை குடித்த அந்த பறவை, விழிப்போடு எட்டுத் திசைகளையும் பார்த்து, குளித்திவிட்டு பறந்து சென்றது. இந்த வீடியோஸ் சமூக வலைதளங்களில் பெயர்களாக பரவி வருகிறது.

Tags

Next Story