மரக்காணம் அருகே இரவு நேரத்தில் ஆடுகளை கடித்து கொதறிய மர்ம விலங்கு
ஆடுகளை கடித்து கொதறிய மர்ம விலங்கு
மரக்காணம் அருகே இரவு நேரத்தில் ஆடுகளை கடித்து கொதறிய மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சம்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட பிரம்மதேசம் அருகே அமைந்துள்ளது அசப்பூர் கிராமம். இந்த கிராமத்தின் அருகில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது குறும்புரம் மூலிகை வன காடு. இதுபோல் இப்பகுதியை ஒட்டியவாறு ஓங்கூர் ஆறும் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அசப்பூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் எழிலரசன் வயது 35. இவர் தனது வீட்டில் 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டு பட்டியில் அடைத்துள்ளார். இவர் காலை தனது ஆட்டுப்பட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது ஆட்டுப்பட்டியில் மர்ம விலங்குகள் கடித்து குதறியதில் நான்கு ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்து கடந்துள்ளது. மேலும் 10 ஆடுகள் காணவில்லை என கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயி எழிலரசன் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம விலங்குகள் கடித்து குதறியதால் உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கால்நடைத்துறை சார்பில் இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வுக்காகவும் எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றை ஆய்வு செய்தால் தான் என்ன விலங்கு கடித்தது என தெரியவரும் என்று விவசாயி எழிலரசனிடம் கூறிச் சென்றுள்ளனர்.
Next Story