சிறுவன் இறப்பில் சந்தேகம் - பொதுமக்கள் மனு
பொதுமக்கள் மனு
ஈரோடு மாவட்டத்தில் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடலில் தூய்மை பணியாளர் அம்சா என்பவர் கௌதம் மற்றும் ஜீவா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்த கௌதமை அவரது நண்பர் ரோஹித் அழைத்துச்சென்று பாலில் ஹான்ஸ்,கஞ்சா,சொலுசன் ஆகியவற்றை கலந்து கொடுத்ததை அருந்தியதாக கௌதம் தனது அக்கா ஜீவாவிடம் கூறியுள்ளார்.
இதனால் தலைவலி மற்றும் மயக்கம்வருவதாக தெரிவிக்க பவானி அரசு மருத்துவமனை தொடர்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.மேலும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கௌதம் உயிரிழந்தார்.கௌதம் உயிரிழப்பிற்கு காரணமாக ரோஹித் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌதமின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.ரோஹித் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கௌதம் உடலை பெறபோவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்.