தூத்துக்குடியில் லாரி டிரைவர் மர்ம மரணம் : போலீஸ் விசாரணை!
மர்ம மரணம்
தூத்துக்குடியில் காட்டுப்பகுதியில் இறந்து கிடந்த லாரி டிரைவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில், புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில், மடத்தூர் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அவர் நெல்லை மாவட்டம், ஆரோக்கிய நாதபுரம் ஐஓபி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (42) என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், லாரி டிரைவரான கருப்பசாமி கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். தூத்துக்குடி வந்த அவர், மடத்தூர் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வெயில் காரணமாக அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிந்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story