குமரி ஆலய திருவிழாவில் மர்ம கும்பல் அட்டகாசம்

குமரி ஆலய திருவிழாவில் மர்ம கும்பல் அட்டகாசம்
குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கெளதம் விசாரணை
காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழாவின் போது ஒலிபெருக்கிகள், மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் காரங்காட்டில் புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது . இதற்காக கோவில் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் யாரோ மர்ம நபர்கள் முகமூடி அணிந்த கும்பல் ஆலயத்தின் மேற்கு தெரு பகுதியில் உள்ள ஒலிபெருக்கி மின்விளக்குகள் மற்றும் சி சி டிவி கேமராவை அடித்த உடைத்து இருந்தது தெரிய வநதது.

இது குறித்து அப்பகுதி மக்கள் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த இரணியல் இன்ஸ்பெக்டர் பத்மாவதி உள்ளிட்ட போலீசார் அடித்து உடைக்கப்பட்ட ஒலிபெருக்கி, மின்விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் குளச்சல் ஏ எஸ் பிரவீன் கௌதம், தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகளும் வந்து நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சம்பவம் குறித்து பங்கு பேரவை துணை தலைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story