பள்ளியில் இருந்து மாயமான கேரள மாணவன் - குமரியில் மீட்பு

கன்னியாகுமரி - கேரளா எல்லையோரம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த 15 மாணவன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 20 ஆம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவன் பின்னர் வீடு தரும்பவில்லை. இது தொடர்பாக பெற்றோர் பொழியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, அந்த மாணவன் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்கு வந்ததாக கண்டுபிடித்தனர். இதையடுத்து கேரளா போலீசார் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இங்குள்ள போலீசார் உதவியுடன் மாணவனை தேடினர். ஆனால் மாணவன் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் திருப்பி கேரளா சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையினால போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாணவன் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வருவதை கண்டுபிடித்தனர். போலீசார் மாணவனை மீட்டு, பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கேரளா போலீசிடம் மாணவர் ஒப்படைக்கப்பட்டார்.
