மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர் - போலிசார் விசாரணை !

மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர் - போலிசார் விசாரணை !
மூதாட்டி செல்லதங்கம்
குளச்சலில் மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்னட்டிவிளையை சேர்ந்தவர் ஐசக் மனைவி செல்லதங்கம் (75 ). ஐசக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் செல்லதங்கம் மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலையில் செல்லதங்கம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் பின் பக்க கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் கதவை திறந்து வெளியே பார்த்துள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் செல்லதங்கத்தின் கழுத்தில் கிடந்த ஏழரைப் பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இது குறித்து குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story