வீட்டின் கதவை உடைத்து நகையை களவாடிய மர்மநபர்கள்

வீட்டின் கதவை உடைத்து நகையை களவாடிய மர்மநபர்கள்

 நகையை களவாடிய மர்மநபர்கள் - போலீசார் விசாரணை 

பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகையை களவாடிய மர்மநபர். காவல்துறை விசாரணை.
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் நிலையம் உட்பட்ட, கொங்கு செல்வா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் வயது 39. இவர் எஸ்பிஐ வங்கியில் ஹெச் ஆர் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கரூர், காந்திகிராமம் பகுதியில் செயல்படும் டி பி எஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். சமீபத்தில் இவர்கள் கரூர் தாந்தோணி மலை பகுதியில் உள்ள கருப்ப கவுண்டன் புதூர், பாலாஜி நகரில் குடி பெயர்ந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி இவர்கள் இருவரும் தாந்தோணி மலை பாலாஜி நகர் வீட்டிற்கு சென்றனர். மீண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி சின்ன தாராபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு சந்தேகம் அடைந்தவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க வளையல், பிரேஸ்லெட், தங்க செயின்கள், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட 15 பவுன் தங்க நகைகள் களப்பாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, இது குறித்து சின்னதாராபுரம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6- தடயங்கள் கிடைக்கப் பட்டதை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை களவாடிய மர்ம நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.

Tags

Next Story