சமயபுரத்தில் பக்தரின் செல்போன், நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

சமயபுரத்தில் பக்தரின் செல்போன், நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

காவல் நிலையம் 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பக்தரின் செல்போன்,10 கிராம் நகை,ரூ.6 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா மட்டங்கல், நானாபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் 46 வயதான அன்பரசன். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார்.

இந்நிலையில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முடி மண்டபத்தில் தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து விட்டு குளிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அவருடைய 10 கிராம் தங்கச் செயின், ரூ. 6000 பணம் ,ஒரு செல்போன் ஆகியவற்றை அவரது மாமாவிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மேற்கண்ட பொருட்களை துணியில் சுற்றி வைத்துவிட்டு அவருடைய மாமாவும் குளிக்க சென்றுள்ளார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 10 கிராம் தங்கச் செயின், பணம் ரூ.6000, ஒரு செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பிச் சென்றனர்.பின்னர் குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த அன்பரசன் தனது நகை, பணம், செல்போன் திருட்டுப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் அன்பரசன் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகை,பணம், செல்போனை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story