இரவில் கழிவுகளை சாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்

இரவில் கழிவுகளை சாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்

எஸ்டி மங்காடு பகுதியில் இரவோடு இரவாக கழிவுகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.


எஸ்டி மங்காடு பகுதியில் இரவோடு இரவாக கழிவுகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
நித்திரவிளை அருகே எஸ் டி மாங்காடு ஊராட்சிக்குட்பட்ட கீழ்கரிக்கல் பகுதியில் இருந்து ஒரு பிலாந்தோட்டம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இரவு மர்ம நபர்கள் வாகனத்தில் கொண்டு வந்து கழிவுகளை வீசி சென்றுள்ளனர்.தற்போது கடந்த இரண்டு தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் வாகன கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இது சம்பநதமாக ஊராட்சி தலைவர் சுகுமாரன் நித்திரவிளை போலீசில் புகார் செய்துள்ளார்.சம்பவ இடம் வந்து போலீசார் விசாரணை செய்தபோது, இந்த கழிவுகளை ஊரம்பு அருகே பின் குளம் பகுதியில் உள்ள ஒரு வாகனஇருக்கைகளுக்கு சீட் தயாரிக்கும் கடையிலிருந்து மினி டெம்போவில் கொண்டு வந்து இந்த கழிவுகளை கொட்டி சென்றதாக தெரியவந்துள்ளது.இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story