திருப்பத்தூர் அருகே பாஜக கொடிக்கம்பத்தை கழிவுநீர்கால்வாயில் வீசிய மர்மநபர்கள்
சேதப்படுத்திய பாஜக கொடிக்கம்பம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அகரம் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர் அதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டது.
மேலும் அதனை வருகின்ற 17ஆம் தேதி திறப்பு விழா செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதனை நேற்று இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி கொடிக் கம்பத்தினை கழிவு நீர் கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த பட்டியலின திருப்பத்தூர் வடக்கு மண்டல தலைவர் பழனி தலைமையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.
எனவே இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே போலீசார் குவிக்கப்பட்டு இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.