மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை !

மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை !

இறந்து கிடந்த சிறுத்தை 

பந்தலூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் வனச்சரகம், நெல்லியாளம் கிராமம் கிளன்ராக் செக்ஷன் 17 வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், இறந்த நிலையில் சிறுத்தை ஒன்றை கண்டனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் படி, கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா முன்னிலையில் முதுமலை வன கால்நடை உதவி மருத்துவர் மூலம் இறந்த சிறுத்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் பந்தலூர், கொளப்பள்ளி, வன உயிரியலாளர், தன்னார்வல, தொண்டு நிறுவனத்தார் மற்றும் பந்தலூர் வனச்சரக பணியாளர்கள் முன்னிலையில் இறந்த சிறுத்தை உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூறாய்விற்க்கு பின் சிறுத்தையின் உடல் சாம்பலாகும் வரை எரியூட்டப்பட்டது. இறந்த சிறுத்தையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது, ஆய்வின் முடிவில் சிறுத்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்

Tags

Next Story