மர்மமான முறையில் இறந்த காட்டுமாடு!

மர்மமான முறையில் இறந்த காட்டுமாடு!

காட்டு மாடுகள் பலி

கேத்தி பாலாடா பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு மாட்டின் சடலத்தை மீட்டு வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பாலாடா பகுதியில் உள்ள ஓடையில் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு மாடு உடலை மீட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து காட்டுமாடு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், "காட்டுமாடு ஓடைக்குள் தவறி விழுந்துள்ளது. அப்போது அடி பலமாக பட்டதால் தண்ணீரில் இருந்து எழ முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிவில் முழு விவரம் தெரிய வரும்," என்றார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபெட்டா வனப்பகுதியில் 3 காட்டுமாடுகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story