கணவர் இறப்பில் மர்மம்: மனைவி புகார்

கணவர் இறப்பில் மர்மம்: மனைவி புகார்

சிவகாசி அருகே கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் மனைவி புகார்..


சிவகாசி அருகே கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
சிவகாசி அருகே கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக மனைவி காவல் நிலையத்தில் புகார்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் - விருதுநகர் சாலையில் பிரபல மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்த காமராஜ் மனைவி ஜெயந்தி (48) பணியாற்றி வருகின்றார். ஜெயந்தியின் கணவர் காமராஜ் கடந்த 14 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 4 ஆண்டுகளாக மன அழுத்தம் காரணமாகவும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.ஜெயந்தியின் மகன் தர்மசேகரன் ஆஸ்திரேலியாவில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி ஆசிரியர் ஜெயந்தி மதுரையில் இருக்கும் தனது தம்பி திலிப்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கணவருக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போனை காமராஜ் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது. உடனடியாக கிளம்பி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கணவர் காமராஜ் தூங்கிக் கொண்டிருப்பார் என நினைத்து அருகில் உள்ள மற்றோரு தம்பி வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு திரும்பிய நிலையில் வீட்டுக்கு வந்து ஜெயந்தி வீட்டின் மாடி பெட்ரூமில் கணவர் காமராஜ் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆசிரியர் ஜெயந்தி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story