மகன் மரணத்தில் மர்மம்: தந்தை புகார்!
புகார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் தெற்குரத வீதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மாரிமுத்து என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், கடந்த "15.12.2018 அன்று எனது மகன் முருகன் எனது வீட்டில் தான் இருந்தான்.
அப்போது சாத்தான்குளம் RC வடக்கு தெரு ஞானராஜ் மகன் செல்வம், முத்துராஜ், வின்சென்ட் ஆகிய மூவரும் என்னை கம்பால் அடித்து சுகமில்லாமல் செய்து விட்டார்கள். மகள் முத்துமாரி, மகன் முருகன் ஆகியோரை கடத்தி விட்டார்கள். மகள் பிடிவாதம் செய்து என்னிடம் இருக்கிறாள்.
இந்நிலையில், வேறு ஒருவர் மனைவி சகாயராணி என்பவரை திருமணம் செய்து விட்டதாக முருகன் மீது ஏரல் காவல் FIR துறைபோட்டுள்ளார்கள். இப்பொழுது முருகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறினார்கள். பிரேதத்தை கண்ணில் காட்டவில்லை. அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே செல்வம், முத்துராஜ், வின்சென்ட், மற்றும் கார்தீசன் ஆகிய 4பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.