கணவன் சாவில் மர்மம் - மனைவி ஆட்சியரிடம் மனு

கணவன் சாவில் மர்மம் - மனைவி  ஆட்சியரிடம் மனு
 ஆட்சியரிடம் மனு
கடையநல்லூர் அருகே கணவன் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் இந்திரா காலனியை சேர்ந்த தொழிலாளி மாடசாமி என்பவர் 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் மாடசாமி சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி நேற்று மதியம் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாடசாமி மனைவி பாக்யம் மனு அளித்ததால் பரபரப்பு உண்டானது. உடனே இந்த மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story