குழந்தை கொலையில் தொடரும் மர்மம்; போலீசார் தீவிர விசாரணை
அரியலூர், ஜூன்.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில், குழந்தையின் தாய், குழந்தையின் பெரியம்மா, தாத்தா, பாட்டியிடம் போலீஸார் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து ரேவதி தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.இரண்டாவது மகள் சங்கீதா(28). என்பவருக்கும் கும்பகோணம் அடுத்த சுந்தரபெருமாள்கோயில் கிராமம் வடக்கு வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன்(31) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 1 1/4 ஆண்டுகள் ஆகியுள்ளது.
பாலமுருகன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே கர்ப்பமடைந்த சங்கீதா பிரசவத்துக்காக தனது தந்தை வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்தார். இந்நிலையில், கடந்த 38 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, சங்கீதா தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சங்கீதா தனது குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு மீண்டும் தூங்கியுள்ளார்.
காலையில் எழுந்து பார்த்தபோது, அருகில் குழந்தை இல்லாதது குறித்து, அருகருகே தேடியுள்ளார். அப்போது, தனது வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூம் அருகே இருந்த தண்ணீர் பேரலில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்து மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கீதா, இச்சம்பவம் மின்னல் வேகத்தில் எங்கும் பரவியது இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிண்டு இராமச்சந்திரன் தலைமையிலான போலீச இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் இறந்த குழந்தை சாதவிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே குழந்தையின் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால், இதுவரை குழந்தை எவ்வாறு உயிரிழந்தது, பேரலில் மூழ்கடித்து கொன்ற கொடூர அரக்கர்கள் யார்? என தெரியவில்லை. இதனிடையே குழந்தையின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு இராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான தனி படை போலீசார் சங்கீதாவின் அப்பா வீரமுத்து, அம்மா ரேவதி, அக்கா அனுசியா ஆகியோரிடம் தொடர்ந்து கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.பிறந்து 38 நாட்கேளே ஆன ஆண் சிசுவை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றது பெற்றோர்களா? உறவினர்களா ? என்பது குறித்தும் குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட்டதா? இந்த விபரீதம் ஏற்பட்டதா? அல்லது குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் குடும்பத்தினரில் எவரேனும் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் கொன்றார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்