பெண்னின் இறப்பில் மர்மம் - உறவினர்கள் சாலை மறியல்

பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவருக்கு தலைவாசல் பகுதியை சேர்ந்த அர்ச்சனா (28) என்பருடன் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 2 அரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் அர்ச்சனாவிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அர்ச்சனா நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அர்ச்சனா இறப்பில் சந்தேகம் உள்ளது எனவும் வரதட்சணை கேட்டு தொடர்ந்து அர்ச்சனாவை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் அதனால் கணவர் அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம் எனவும் வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சூழலில் பெண்ணின் கணவர் அருண் மாமனார் அத்தியப்பன் மாமியார் மல்லிகா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அதனையடுத்து தலைமறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நாமக்கல் - மோகனூர் சாலையில் பெண்னின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் நாமக்கல் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் மோகனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Tags

Next Story