மாயமான சமையல் மாஸ்டர் புதருக்குள் சடலமாக மீட்பு

மாயமான சமையல் மாஸ்டர் புதருக்குள் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் வசித்து வருபவர் 65 வயதான சந்திரன். இவருக்கு சில வருடங்களாக கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சந்திரன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள புதர் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது கால்நடையை தேடிச் சென்ற போது அழுகிய நிலையில் இருந்த சடலம் கிடந்துள்ளது. உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தது சந்திரன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மனைவி சடலமாக கிடந்தது தனது கணவர்தான் என அடையாளம் காட்டியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சமையல் மாஸ்டர் எப்படி சடலமாக கிடந்தார், எதற்க்காக சாலையை விட்டு புதர் பகுதிக்கு சென்றார். தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதும் காரணமா, என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
