நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும், சின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு புவிசார் குறியீடு பெற்று தாலுகா வாரியாக குளிர் பதன கிடங்கு கட்டித் தரப்படும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி விவசாயிகளுடன் அமர்ந்து வெங்காயம் ஆய்ந்தவாறு வாக்கு சேகரித்தார் .
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழி பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஏப்ரல் பத்தாம் தேதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசும் போது, மது ஆலைகள் பெருகிவிட்டது, மது ஆலைகளை மூடி விடுவோம், மது கடைகளையும் மூடி விடுவோம் என்று கூறினார்கள்.
ஆனால் தற்பொழுது அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. மது தயாரிப்பதும், அதனை விற்பதும் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே செய்கின்றனர். 450 ரூபாய் விற்ற கேஸ் சிலிண்டர் தற்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கிறது. இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் சாதனை என்றார். பிரசாத்தின் இடையே நாட்டார்மங்கலம் கிராமத்திற்கு சென்ற வேட்பாளர் தேன்மொழி, அங்கு சின்னவெங்காயம் ஆய்ந்து கொண்டிருந்த பெண்களிளுடன் அமர்ந்து, சின்னவெங்காயம் ஆய்ந்தவாறு அவர்களிடம் பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நான் . மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ஏமாற்ற மாட்டேன். சின்னவெங்காயம் அதிகம் விளைய கூடிய இந்த பகுதியில் வெங்காய கிடங்கு அமைத்து நல்ல விளை கிடைக்க செய்வேன் என்றார்.
தொடர்ந்து பேசிய தேன்மொழி என் வாக்குறுதிகளை நம்பி கண்டிப்பாக நீங்கள் வாக்களிக்கலாம், இத்தனை ஆண்டுகளாக வாக்களித்து ஏமாந்து தான் போனோம் எனவே மாற்றத்தை கொடுங்கள் எனக்கு வாக்களியுங்கள் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு வெங்காய சேமிக்கக்கூடிய குளிர்பதனை கிடங்கையை கண்டிப்பாக அமைத்து தருவேன், சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்.
மேலும் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும், எனவே மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான எனக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.