நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேட்பாளர் கனிமொழி அறிமுக கூட்டம் 

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கனிமொழி அறிமுக கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது

விரைவில் இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர்சீமான் அறிவித்துள்ளார்.அவ்வாறு அறிவிக்கப்பட்ட சேந்தமங்கலம் ராமுடையானூர் என் புதுப்பட்டியைச் சேர்ந்த Gகனிமொழி என்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் உள்ள எஸ் கே வி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னணி பிரமுகர்கள்பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மண்டல செயலாளர் மருத்துவர் பாஸ்கர் தலைமை வகித்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார் அவரது வெற்றிக்கு கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும் என பாஸ்கர் கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடுமையாக உழைத்து 50 ஆயிரத்திற்கும் அதிகப்படியான வாக்குகள் பெற்றுத் தருவோம் என கட்சி நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

அறிமுகத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது என்னை வேட்பாளராக அறிவித்த கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கும்,சேந்தமங்கலத்தை சேர்ந்த என்னை தற்போது திருச்செங்கோடு நாம் தமிழர் சொந்தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த மாவட்ட செயலாளருக்கும் என் வெற்றிக்கு பாடுபடுவேன் என கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஊழலற்ற நிர்வாகம் கல்வி மருத்துவம் சுகாதாரம் போன்றவற்றில் உள்ள பாகுபாடுகளை அகற்றி அனைவருக்கும் சமமாக கிடைக்க பாடுபடுவேன் என கூறினார்

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மண்டல செயலாளர் பா.பாஸ்கர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில வேட்பாளர் க.கனிமொழி மாநில மகளிர் பாசறை யுவராணி, மாநில தமிழ்மீட்சி பாசறை இணைச்செயலாளர் புலவர் வெங்கடேன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பொ.நடராஜன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், திருச்செங்கோடு தொகுதி தலைவர் பாஸ்கரன், செயலாளர் யுவராஜ், செய்தி தொடர்பாளர் அஜித் முத்துசாமி, பொருளாளர் பாலாஜி, தி.கோடு இளைஞர் பாசறை செயலாளர் ராமுதம்பி(எ)லட்சுமணன், தி.கோடு மகளிர் பாசறை மேனகா, அமுதா, ராசிபுரம் தொகுதி செயலாளர். அருண் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story