நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
போக்குவரத்து கழக ஊழியர் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு, நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் மைலோடு கிறிஸ்தவ ஆலய இல்லத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு அவரது மனைவி, மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் இன்று மாலை நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவியர் குமாரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அதுவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலை வாங்க போவதுமில்லை எனக்கூறி குமரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி, அவரது இரு பெண் குழந்தைகள் ஆகியோருடன் நடந்த போராட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். இறந்த சேவியர் குமாரின் குடும்பத்தினருக்கு முறையான இழப்பீடையும், வேலைவாய்ப்பையும் அரசு வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் குமரி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பெல்பின்ஜோ, ரீகன் ரொனால்டு, ஹிம்லர், ஜெமிலா ஆஸ்லின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.