வேங்கை வயலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் !

வேங்கை வயலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் !

 து.ராஜேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் து.ராஜேஷ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் து.ராஜேஷ் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேங்கைவயலில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளே வருவதைத் தடுப்பதற்காக பல வழிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வரும்நிலையில், அந்தத் தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் உள்ளே சென்றனர். வேட்பாளருடன் அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரும் சென்றனர். வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனாலும், இரு கிராமங்களைச் சேர்ந்த யாரும் இவர்களின் பிரசாரத்தைக் கண்டு கொள்ளவில்லை.சிறிதுநேரத்துக்குப் பிறகு அனைவரும் அந்த ஊர்களில் இருந்து திரும்பினர்.

Tags

Next Story